சின்னத்திரை படப்பிடிப்புகளுக்‍கு நாளை முதல் மேலும் தளர்வு : 60 நபர்கள் வரை கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி

May 30 2020 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளில், நாளை முதல் 60 நபர்கள் வரை கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்‍கப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்‍கை வைக்‍கப்பட்டது. இதனையடுத்து, 20 நபர்களுடன் படப்பிடிப்புகளை நடத்திக்‍கொள்ள கடந்த 21-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப வல்லுநர் என 60 பேர் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ள, நாளை முதல் அனுமதி அளிக்‍கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00