தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்‍ கழக தலைமை பொறியாளருக்கு எதிரான ஊழல் புகார் வழக்‍கில் சி.பி.ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

May 30 2020 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்‍ கழக தலைமை பொறியாளருக்கு எதிரான ஊழல் புகார் வழக்‍கில் சி.பி.ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு திருச்சி மாவட்ட மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்‍ கழகத்தில் பணியாளராக சேர்ந்து தற்போது கள உதவியாளராக பணியாற்றும் சேலத்தை சேர்ந்த கே.ராஜீ என்பவர் தாக்‍கல் செய்துள்ள மனுவில், திருச்சி மாவட்ட தலைமைப் பொறியாளராக உள்ள வளர்மதி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட விரோதமாக கைவிடப்பட்ட நிலங்களை அபகரித்து பினாமி பெயரில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், புயல் பாதிப்புகளின்போது மின்தடம் சீரமைப்பு பணிக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய கோடிக்கணக்கான ரூபாயில் ஒப்பந்த ஊழியருக்கு தினமும் ஆயிரம் ரூபாய் சம்பளம் என நிர்ணயித்து, அதில் முறைகேடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மின் வாரிய ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிறுவனங்களுடன், ஒப்பந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கமிஷனாக பல்வேறு நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளதாகவும், அவரது மகனை மின் வாரிய ஒப்பந்ததாரராக நியமித்து ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாளை ஓய்வுபெறும் வளர்மதிக்கு எதிரான புகாரை சி.பி.ஐ விசாரிக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.எம் சுப்ரமணியம், இதுகுறித்து 4 வாரத்தில் சி.பி.ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00