தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Jun 1 2020 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆலோசனைப்படி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

தென்சென்னை தெற்கு மாவட்டம், மயிலாப்பூர் பகுதியில் ஊரடங்கால் பாதிக்‍கப்பட்டுள்ள 500 பேருக்‍கு அரிசி, காய்கறிகள், கபசுர குடிநீர் ஆகியவற்றை, கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் விருகை திரு.T.S.கண்ணன், சைதாப்பேட்டை 121-வது வட்ட இணைச் செயலாளர் திரு.R.K.ரகு, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் திரு.S.M.ஜோ ஆகியோர் வழங்கினர். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.H.K.L.ஜிம் பாஷா, பகுதி இணைச் செயலாளர் விமலா, கழக நிர்வாகிகள் திரு.சுரேஷ்பாபு, திரு.தனஞ்செழியன், திரு.ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் மடிப்பாக்கம் S. ராஜேந்திரன் ஏற்பாட்டின் பேரில், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கார்த்திக் தலைமையில், நாராயணபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 300 ஏழை எளிய குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய் என ஒரு வாரத்துக்கு உண்டான காய்கறிகளை, செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. ம. கரிகாலன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அழகு சுப்பிரமணியம், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஜெயமுருகன், வட்டச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தாராபுரம் அருகே சமத்தூர் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு, ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் திரு. எம்.ஆர் ராஜேந்திரன் வழங்கினார். இதில் தாராபுரம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மூலனூர் ஒன்றியச் செயலாளர் வேலுமணி, குண்டடம் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, உள்ளிட்ட நிர்வாகிக் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டக் கழகம் சார்பில், கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரம் கூலித் தொழிலாளர் குடும்பத்தினருக்கு, அரிசி, மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை, மாவட்டக் கழகச் செயலாளர் திரு.தேர்போகி V.பாண்டி, சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. கார்த்திக், கல்லல் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. அசோகன் ஆகியோர் வழங்கினர்.

கடலூர் கிழக்கு மாவட்டக் கழக மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பாக, கடலூர் வண்ணாரபாளையம் 14 வது வார்டு பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு, அரிசி, காய்கறி மற்றும் முகக்கவசங்களை, கழக அமைப்புச் செயலாளர் திரு. கே.எஸ்.கே.பாலமுருகன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. வி.எம்.சூரியமூர்த்தி ஆகியோர் ஆலோசனைப்படி வழங்கப்பட்டன. நகர செயலாளர் திரு.வி. இராதாகிருஷ்ணன், கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் திரு.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00