திண்டுக்கல்லில் இருந்து 6 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம் : சுங்கக்கட்டணம் நிலுவை - அரசுப் பேருந்துகள் செல்ல அனுமதி மறுப்பு

Jun 1 2020 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்‍கப்படும் நிலையில், சுங்கக்‍கட்டணம் நிலுவையில் இருப்பதாகக்‍கூறி, கொடைரோடு சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகள் செல்ல அனுமதிக்‍கப்படாததால், 3 மணி நேரத்திற்கும் மேல் பயணிகள் அவதிக்‍குள்ளாகினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு சுமார் 400 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொடைரோடு அருகே உள்ள சுங்கக்‍சாவடியை அரசுப் பேருந்துகள் இன்று காலை கடக்க முயன்றபோது, அரசு பேருந்துகளுக்கான சுங்கக்‍ கட்டணத்தை அரசு மற்றும் போக்குவரத்து கழகம் செலுத்தாததால், இந்த வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்‍கவில்லை. இதனால் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள், காலை 6 மணி முதல் 9 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்‍குள்ளாகினர்.

சம்பவ இடத்துக்கு வந்த அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார், சுங்கச்சாவடி பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அரசு பேருந்துகள் செல்ல சம்மதிக்காததால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுங்கச்சாவடியை திறந்துவிட்டு பேருந்துகள் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00