நெல்லையில் சமூக இடைவெளியின்றி பயணம் மேற்கொள்ளும் மக்கள் : கொரோனா தொற்று பரவும் அபாயம்

Jun 1 2020 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் ஒரு கட்டமாக, அரசுப் பேருந்துகள் இயக்‍கப்படும் நிலையில், நெல்லையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்‍கள் கூட்டம் கூட்டமாக பயணம் மேற்கொண்டதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்‍கப்பட்டு, 68 நாட்களுக்‍குப் பின்னர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் நீங்கலாக, பொதுப்போக்‍குவரத்து இன்று தொடங்கியது. திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் இருந்து 171 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. 84 நகரப் பேருந்துகளும், ஊரகப் பகுதிகளுக்கு 87 பேருந்துகளும் இயக்கப்பட்டன. எனினும், திருநெல்வேலி, பாளையங்கோட்டை பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. கடையத்தில் இருந்து நெல்லைக்கு வந்த அரசுப் பேருந்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முகக்‍கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொதுமக்‍கள் பயணம் மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் இல்லாததால் பேருந்துகள் இயக்கம் குறித்த தகவல்கள் தெரியாமல் பொதுமக்‍கள் அவதியுற்றனர். நெல்லையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எந்தப் பேருந்துகளும் இயக்‍கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00