நாமக்கல் மாவட்டத்தில் சொத்துப் பிரச்னையில் உணவளிக்காத மகன் மீது ஆத்திரம் : கடப்பாரையால் மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது

Jun 1 2020 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்கல் மாவட்டத்தில், சொத்துப் பிரச்னையால் உணவளிக்காத மகனை, கடப்பாரையால் அடித்துக்கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

இறையமங்கலம் கிராமம் பொய்யேரி புதூரில் வசிக்கும் முத்துசாமி என்பவர், தனது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனது மூத்த மகன் மற்றும் இளையமகன் விஜயகுமார் வீடுகளில், தலா 2 மாதங்களாக ஜீவனம் செய்து வந்துள்ளார். இதில் தந்தை முத்துசாமியின் பூர்வீக சொத்தில், தனக்கு சேர வேண்டிய பங்கை விஜயகுமார் கேட்டு, அவரது தந்தைக்கு அடிக்கடி உணவு தராமல் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று தந்தை முத்துசாமியும், மகன் விஜயகுமாரும் போதையில் இருந்துள்ளனர். தனது மகன் சொத்து தரவில்லை என்பதற்காக, உணவளிக்க முடியாது எனக் கூறியதால், ஆத்திரத்தில் இருந்த முத்துசாமி, தனது வீட்டில் இருந்த தேங்காய் உரிக்கும் கடப்பாரையை எடுத்து, விஜயகுமாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார், ரத்தம் சொட்ட சொட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விஜயகுமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தந்தை முத்துசாமியை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00