தி.மு.க.வுக்கு எதிராக அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் : சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத அதிமுகவினர் - பொதுமக்கள் அச்சம்

Jun 1 2020 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊருக்குத்தான் உபதேசம் நமக்கு இல்லை என்பது போல, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் திமுகவிற்கு எதிராக அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

உயர் பதவியிலுள்ள பட்டியல் இன மக்களை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆர் எஸ் பாரதி மற்றும் திமுக நிர்வாகிகளைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அதிமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிமுக தொண்டர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், திமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் முன்னிலையிலேயே சமூக இடைவெளியை பின்பற்றாமல் அரசு மருத்துவமனை முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது பொது மக்களிடையே சமூக தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00