ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகளை மதிக்காமல், கடன்களை வசூல் செய்யும் தனியார் நிதி நிறுவனங்கள் - அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வாடிக்கையாளர்களால் பரபரப்பு

Jun 2 2020 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில், ஆர்.பி.ஐ., விதித்த கட்டுப்பாடுகளை மதிக்காமல், கடன்களை வசூல் செய்யும் தனியார் நிதி நிறுவனங்களை கண்டித்து, திருச்சி, ஈரோடு கிளை அலுவலகங்களை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Roll visual: நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு மாதங்களாக பணிக்குச் செல்லாமல், ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஊரடங்கு காலத்தின் சிரமங்களால், கடன் தவணையை மூன்று மாதங்கள் தள்ளி வைத்தன. அதன் பிறகு கூடுதலாக மேலும் மூன்று மாதங்கள் என, ஆறு மாதங்கள் கடனுக்கான தவணையை செலுத்தலாம் என அறிவித்ததது. மேலும் வாடிக்கையாளர்களை வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் தொந்தரவு செய்யக்கூடாது என வலியுறுத்தி இருந்தது. ஆனால், மத்திய அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட ஒருசில தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம், மாத தவணை தொகையை கட்டாததால், அபராதம் விதித்ததோடு, உடனடியாக கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டுமென, அடியாட்களை கொண்டு மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்து, அந்த நிதி நிறுவனத்தின் திருச்சி கிளை அலுவலகத்தை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்படி, போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர். இதே போல், ஈரோட்டில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்தின் அலுவலகத்தையும், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். அந்த அலுவலகத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இயங்கி வந்ததாலும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமலும் இருந்ததால், தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், நிதி நிறுவன கிளைக்கு சீல் வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00