தந்தை - மகன், சிறையில் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி பொறுப்பைத் தட்டிக் கழிக்கக்கூடாது - முதலமைச்சருக்‍கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

Jun 29 2020 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை - மகன், சிறையில் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி, பொறுப்பைத் தட்டிக் கழிக்கக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், கோவில்பட்டி கிளைச்சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வழக்கு நீதிமன்ற அனுமதியுடன் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுமென, தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதனை விமர்சித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன், "சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி, பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள் எனவும், குற்றவாளிகள் மேல் ஐபிசி 302-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். "சி.பி.ஐ. விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் எனக் காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள் - காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி" என திரு.கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00