உடல் கூறாய்வு அறிக்கை அடிப்படையில் இருவரது உடலிலும் மோசமான காயங்கள் இருந்தன - நீதியை எதிர்நோக்கி காத்திருக்‍கும் குடும்பத்தினர்

Jun 30 2020 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் இரடடை மரண விவகாரத்தில், முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின்படி, இறந்துபோன தந்தை-மகனின் உடலில் அதிக காயங்கள் இருந்ததால், சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிராதபன் ஆகியோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதித்துறை நடுவரை ஒருமையில், மரியாதைக் குறைவாக பேசியதாக காவலர் பிரபாகரனையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இவர்கள் மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மூவரும் நேரில் ஆஜராகினர். நீதித்துறை நடுவரின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாவுகவும் அவர்கள் மீதான நீதிமன்ற குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை நீதித்துறை நடுவர் விசாரிக்கிறார் என்பது தெரிந்தும் பிரச்சினையை பெரிதுபடுத்தும் வகையில் நடந்து கொண்டது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில், இறந்தவர்களின் உடலில் அதிக காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசாரின் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்தனர். வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்திருப்பதால், இந்த வழக்கில் காலதாமதத்தை நீதிமன்றம் விரும்பவில்லை என்றும், ஒரு நொடி கூட வீணாகக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சிபிஐ தரப்பினர் பலவித அனுமதிகளைப் பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்களை அழிக்க வாய்ப்புள்ளது என கருத்துதெரிவித்த நீதிபதிகள், சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் வரை நெல்லை சரக ஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00