முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் ஜூலை 6-க்கு பிறகு அமலாகும் ‌தளர்வுகள்

Jun 30 2020 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக, தமிழகத்தின் பிற பகுதிகளில், வரும் ஒன்றாம் தேதிக்கு பின்னரும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரையில் ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் 5-ம் தேதிக்கு பின்னரும் எந்தெந்த பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, தற்போது காணலாம்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்கள், 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் - எனினும் 20 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்களில் தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கலாம்.

தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

உணவகங்களில் குளிர்சாதன வசதியின்றி வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும்.

தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் ஆகியவை, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

வலைதள நிறுவனங்கள் அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்கலாம். ஆட்டோக்களை 2 பயணிகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முடி திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல், நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மீன் கடைகள், இறைச்சி கடைகள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00