சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பான விசாரணையில் மேஜிஸ்திரேட்டை அவமதித்த விவகாரம் - ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்‍கு மாற்றம்

Jun 30 2020 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி சாத்தன்குளம் காவல் நிலையத்தை வருவாய் துறை தனது கட்டுப்பாட்டுக்‍குள் கொண்டு வந்துள்ளது. இதனனை தொடர் காவல்நிலைய பொறுப்பாளராக வட்டாட்சியர் திரு.செந்தூர் ராஜ் நியமிக்‍கப்பட்டுள்ளார்.

சாத்தான்குளத்தினை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெர்னிக்ஸ், கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த போது அடுதடுத்து மர்மமான முறையில் இறந்தது, நாடு முழுவத்ம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன் வந்து விசாரனை நடத்தி வருகிறது. இதனை அடுத்து கோவில்பட்டி குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மற்றும் தூத்துக்குடி மாஜிஸ்திரேட்கள், கடந்த இரண்டு நாட்களாக விசாரனை நடத்தினர்.

இந்நிலையில், நேற்றைய விசாரனையில் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் மகராஜன் விசாரனைக்கு ஒத்துழைக்காததோடு தகாத வார்தைகளும் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காவலர் மகாராஜன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டர். தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார் மற்றும் டி.எஸ்.பி. பிரகாஷ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்‍கப்பட்டுள்ளனர்.

சாத்தன்குளம் காவல்நிலைய இந்த செயல்பாடுகளால் காவல் நிலையத்தினை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக வட்டாட்சியர் திரு.செந்தூர் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவில்பட்டி மாஜிஸ்த்திரேட் பாரதிதாசன் இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்த உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00