சாத்தான்குளம் சம்பவத்தில், விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டையே மிரட்டும் துணிச்சலை காவல்துறைக்‍கு கொடுத்தது யார்? என்பதை எடப்பாடி பழனிசாமி அரசு விளக்‍க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Jul 1 2020 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றமிழைத்தவர்கள் மீது கொலை வழக்‍குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்‍கது என, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டையே மிரட்டும் துணிச்சலை காவல்துறைக்‍கு கொடுத்தது யார்? என்பதை எடப்பாடி பழனிசாமி அரசு விளக்‍க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் உடல்நலக்குறைவால்தான் உயிரிழந்தார்கள் என்று முதலமைச்சர் கூறியிருந்த பின்னணியில், அந்த சம்பவத்திற்காக கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும், அதே நேரத்தில் இது குறித்து விசாரிக்கச் சென்ற மாஜிஸ்திரேட்டையே ஒருமையில் மோசமாகப் பேசி மிரட்டும் அளவுக்கு கடைநிலை போலீஸ் கான்ஸ்டபிளுக்கு துணிச்சல் கொடுத்தது யார்? என்பதை பழனிசாமி அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது அப்பட்டமாகத் தெரிகிற நிலையில், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, "ஜெயராஜ் உடல்நலக்குறைவாலும், பென்னிக்ஸ் மூச்சுத்திணறலாலும் உயிரிழந்துள்ளனர்" என்ற அறிக்கை கொடுத்து, முதல்நாளில் இருந்தே அதனை மூடி மறைக்கிற வகையில் செயல்படுகிறாரோ என்ற மக்களின் சந்தேகம், நீதிமன்றத்தில் வெளியான, அடுத்தடுத்த ஆதாரங்களால் மெய்யாகி உள்ளது-

முதலமைச்சர் இப்படி பதற்றமாக செயல்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணை நடத்த சென்ற மாஜிஸ்திரேட் அளித்த அறிக்கை அனைத்துத் தரப்பினரையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது- சாத்தான்குளம் காவல் நிலைய கடைநிலைக் காவலர் ஒருவர், மாஜிஸ்திரேட்டைப் பார்த்து ஒருமையில் கொச்சையான வார்த்தைகளில் பேசி மிரட்டியிருக்கிறார்- அதுமட்டுமின்றி, விசாரணைக்காக மாஜிஸ்திரேட் கேட்ட ஆவணங்களையும், லத்தி போன்ற ஆதாரங்களையும் போலீசார் தர மறுத்திருக்கிறார்கள் - அங்கு இருந்த தூத்துக்குடி ஏ.எஸ்.பி., சாத்தான்குளம் டி.எஸ்.பி. போன்ற காவல்துறை அதிகாரிகளும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ள திரு.டிடிவி தினகரன், உயர்நீதிமன்றம் நேரடியாக தலையிட்டிருக்கும் வழக்கிலேயே இப்படி பட்டவர்த்தனமாக காவல்துறையினர் அடாவடியாக செயல்படுவதன் பின்னணி என்ன? எந்தப் பின்புலமும் இல்லாமல், ஒரு கான்ஸ்டபிளால் மாஜிஸ்திரேட்டைப் பார்த்து இந்தளவுக்குத் தரக்குறைவாக பேசிவிட முடியுமா? அவருக்கு அந்தத் துணிச்சலைக் கொடுத்தது யார்? இவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சம்பவத்தின் போது சாத்தான்குளத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவரையும் மற்றவர்களையும் காப்பாற்ற முயற்சிப்பது யார்? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயராஜையும் அவரது மகன் பென்னிக்சையும் விடிய, விடிய காவல்நிலையத்தில் வைத்து அடித்திருக்கிறார்கள் என்று தலைமைக்காவலர் ரேவதி அளித்த வாக்குமூலமும், இருவருக்கும் அதிகமான காயங்கள் இருந்தது முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்திருப்பதும், முதலமைச்சர் பச்சையாக பொய் சொல்லியிருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கின்றன என தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், காவல்துறை மற்றும் உளவுத்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, இதெல்லாம் தெரிந்தும், இந்தக் கொடுஞ்செயலை மொத்தமாக மறைக்கும் வகையில் முந்திக்கொண்டு அறிக்கை கொடுத்தது ஏன்? மாஜிஸ்திரேட்டிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்ட காவலருக்கு மன அழுத்தம் இருப்பதாக அரசு சொன்னதைப் போல, அந்தத்துறையின் அமைச்சரான முதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா? என கேட்டுள்ளார்.

மனசாட்சியுள்ள யாரையும் உலுக்கி எடுக்கும் சாத்தான்குளம் கொடூரத்தில் வெறுமனே பணியிட மாற்றங்களும், பணியிடை நீக்கம் போன்ற கண்துடைப்புகள் மட்டுமே இரண்டு உயிர்களைப் பறிகொடுத்திருக்கும் குடும்பத்தினருக்கு நீதி வழங்கிடாது- நீதிமன்றம் தெரிவித்திருப்பதைப் போல கொலை வழக்குப்பதிவு செய்து குற்றம் புரிந்தவர்களுக்கு விரைவில் தண்டனை தருவதுதானே சரியாக இருக்க முடியும்?- அதுதானே காவல்துறையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் இத்தகைய கரும்புள்ளிகள் இனியும் தோன்றாமல் இருப்பதற்கும், இது போன்ற கொடூரங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருப்பதற்கும் வழி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கை தாமாக முன்வந்து கையிலெடுத்த உயர்நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கும்வரை தடயங்கள் அழிக்கப்படாமல் இருப்பதற்காக வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்திருக்கிறது - கொஞ்சமாவது நேர்மையும், மனசாட்சியும் இருந்திருந்தால் சாத்தான்குளம் சம்பவம் நடந்தவுடனே முதலமைச்சரும், அரசாங்கமும் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள்- அப்படி செய்திருந்தால் உயர்நீதிமன்றமே தலையிட்டு இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்காது என தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், எனவே, இதன்பிறகாவது முதலமைச்சர் பழனிசாமி குறைந்தபட்ச மனிதநேயத்தோடு செயல்பட்டு, நீதிபதிகள் அச்சம் தெரிவித்திருப்பதைப் போன்று தலைமைக்காவலர் ரேவதியின் வாக்குமூலத்தை காவல்துறையினர் அழிக்கவோ, மாற்றவோ இடம் கொடுக்காமல் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்- உயர்நீதிமன்றம் தொடர்ந்து இவ்வழக்கை கண்காணிக்கவிருப்பதாக கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிற நிலையில்- சி.பி.ஐ. விசாரணை தொடங்கிய பிறகும் தங்களது நேரடிப் பார்வையில் வைத்திருந்து குற்றவாளிகளுக்கும், பின்னால் இருந்து அவர்களைக் காப்பாற்றத் துடிப்பவர்களுக்கும் உரிய தண்டனை வழங்கப்படுவதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00