சாத்தான்குளம் இரட்டை மரணம் சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் கைது - கொலை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

Jul 2 2020 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கில், உதவி ஆய்வாளா்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை மற்றும் தடையங்களை அழித்தது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறைச்சாலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களை போலீசார் விடிய விடிய வைத்து கொடூரமாக தாக்கியது விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் கையில் எடுத்துள்ள நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரகு கணேஷுக்கு தூத்துக்குடியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் நீதிபதி பாஸ்கரன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 16ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நிதிபதி உத்தரவிட்டதையடுத்து தூத்துக்குடி மாவட்ட சிறையில் ரகு கணேஷ் அடைக்கப்பட்டார். இதனிடையே, காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை பிரண்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ள நிலையில், அவர்களையும் சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் இரட்டை மரணம் சம்பவம் தொடர்பாக காவல்துறையை சேர்ந்த 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00