சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் - கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு

Jul 4 2020 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிபிசிஐடி நடவடிக்கையை தொடர்ந்து காவலர் முத்துராஜ் தப்பிச்சென்று தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, காவலர் முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்திருந்தது. இந்நிலையில் காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை துாத்துக்குடி சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர்மன்ற மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை வரும் 17ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00