பாட்டி வைத்தியம் உள்ளிட்ட நமது பாரம்பரிய வைத்தியங்கள் மறக்கப்பட்டு வருகின்றன - யோகாவைப் போலவே சித்த மருத்துவமும் உலகத்திற்கு கிடைத்த பரிசு என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

Jul 8 2020 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இம்ப்ரோ எனும் மருத்துவப் பொடியை மத்திய அமைச்சகம் பரிசோதித்து, அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3-ம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திரு.சுப்ரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்‍கல் செய்தார். அதில், கொரோனோவிற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இம்ப்ரோ மருத்துவப் பொடியை பரிசோதித்து முடிவுகளைத் தெரிவிக்‍க ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்‍கொண்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து, அதுகுறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மருந்துகளை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, சாதாரண மனிதரும் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

தற்போதைய தலைமுறையினர் துரித உணவுகளில் அதீத ஆர்வம் காட்டுவதால் பாட்டி வைத்தியம் உள்ளிட்ட நமது பாரம்பரிய வைத்தியங்கள் மறக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், யோகாவைப் போலவே சித்த மருத்துவமும் நமது நாட்டிற்கும் இந்த உலகத்திற்கும் கிடைத்த ஒரு பரிசு என்றும் கூறினர். ஊரடங்கால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பொக்கிஷமாக பயன்படுத்தி, குறைந்த முதலீட்டில் சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி, சாதாரண மக்களுக்கு மருந்துகள் சென்றடைய வேண்டும் என தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00