சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பான வழக்‍கு - மேலும் 5 காவலர்கள் கைது

Jul 8 2020 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை - மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர், சிறையில் காவலர்களால் கடுமையாக தாக்‍கப்பட்டு, உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்திலேயே உலுக்‍கியது. வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிபிசிஐடி விசாரிக்கும்படி தெரிவித்தது .அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களை அனைவரும் மதுரை மத்திய சிறையில் தனித்தனியாக அடைத்து வைக்‍கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்‍கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00