ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்‍களை தகுதிநீக்‍கம் செய்யக்‍கோரிய வழக்‍கு - சபாநாயகர் மற்றும் 11 பேருக்‍கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Jul 8 2020 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கில், சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

தமிழக சட்டசபையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. அதனையடுத்து ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்ட புதிய மனுவில், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இதுகுறித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பேரவைச் செயலர் மற்றும் 11 எம்.எல்.ஏக்களும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00