வெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் கைதிகள் பேசுவதற்கு முன்னுதாரணங்கள் இல்லாவிட்டால், அதனை உருவாக்‍க வேண்டும் - நளினி வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Jul 8 2020 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் சிறைக்‍ கைதிகள் பேசுவதற்கான முன்னுதாரணம் இதுவரை இல்லை என்றால், அதனை உருவாக்‍கலாம் என தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி வழக்‍கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, வெளிநாட்டில் உள்ள தனது உறவினர்களிடம் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பேச அனுமதி கோரி, நளினியின் தாயார் திருமதி பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணையில், இன்று பதிலளித்த தமிழக அரசு, வெளிநாடுகளில் வசிக்‍கும் உறவினர்களுடன் நளினி, முருகன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்‍கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் பதிலை எதிர்நோக்‍கி உள்ளதாகவும் தெரிவித்தது.

இதனைக்‍ கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு மத்திய அரசுக்‍கு எழுதிய கடிதத்தை தாக்‍கல் செய்யும்படி உத்தரவிட்டனர். மேலும் வெளிநாடுகளில் வசிக்‍கும் உறவினர்களுடன் கைதிகள் இதற்கு முன் பேசியதற்கான முன்னுதாரணங்கள் இல்லாவிட்டால், அதனை உருவாக்‍குவோம் எனத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்‍கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து விசாரணையை வரும் 14-ம் தேதிக்‍கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00