33 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழ் - கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Jul 11 2020 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
சரித்திர வெற்றிகளைப் பதிவு செய்யப்போகும் முக்கியத்துவம் வாய்ந்த 33 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழுக்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தமிழ்நாட்டின் வரலாற்றில் எப்போதும் மறையாத மந்திரச்சொல்லான நம்முடைய புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழ், முத்தான 33 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக கால்பதித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார்.

தாயன்பால் தமிழக மக்களின் மனங்களில் எல்லாம் நிறைந்திருக்கிற, தொட்டதை எல்லாம் துலங்கவைத்த புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கரங்களால் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை, எல்லாவற்றிலும் எதிர்நீச்சலடித்து, தொடர்ந்து உற்சாகத்தோடு பயணித்து வருகிறது - இந்த 32 ஆண்டுகளாக கழகத்தின் லட்சியத்தைப் பறைசாற்றும் முரசாக, களத்தில் எதிரிகளைப் பந்தாடும் வாளாக, கழகத்தைக் காத்து நிற்கும் கேடயமாக, இயக்கத்தோடும், அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் இதயங்களோடும் மிக நெருக்கமாக 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' திகழ்வதை நினைத்து பெருமிதம் கொள்வதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு இருப்பதைப் போலவே புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பிறகு, கழகத்தின் லட்சியங்களுக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய சோதனை ஏற்பட்ட நேரத்தில் பிறந்தது நம்முடைய நாளிதழ் - அப்போது புரட்சித்தலைவி அம்மா, கழகத்தையும், இரட்டை இலையையும் மீட்டெடுத்து, தமிழக மக்களின் அன்பை முழுமையாக பெறுவதற்கு நடத்திய லட்சியப் போராட்டத்தில் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் பங்கு முக்கியமானது - அதன் பிறகு எதிரிகளும் துரோகிகளும் கழகத்தை உருக்குலைக்க நினைத்த சோதனைக் காலங்களிலும், அதிகாரத்திற்கு அஞ்சி நடுங்கியும், அடிபணிந்தும், ஊடகங்கள் நம்மை இருட்டடிப்பு செய்த நேரங்களில் எல்லாம் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் கழகத்திற்காக ஆற்றிய பங்களிப்பை, புரட்சித்தலைவி அம்மாவோடு இருந்து நெருக்கடிகளில் பங்கெடுத்த தியாகத்தலைவி சின்னம்மாவும், அவர்களோடு இருந்தவன் என்கிற முறையில் தானும் நன்கறிவோம் என்பதை தெரிவித்துக்‍கொள்வதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான வழித்தோன்றல்களான லட்சோப லட்சம் கழகத் தொண்டர்களைப் பொறுத்தமட்டில், 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' என்பது பத்திரிகை மட்டுமே அல்ல - நம் உணர்வோடு கலந்திருக்கிற உடன்பிறப்பு. நமக்கு உணர்வூட்டுகிற அறிவாயுதம். தீயசக்திகளையும், துரோகிகளையும் தோலுரித்துக் காட்டுகிற காலக்கண்ணாடி - ஒரு நாளும் தடுமாறாத தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்குரல் -இத்தகைய சிறப்பு வாய்ந்த 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழ் இந்த 33 ஆம் ஆண்டில், காலத்தின் சாட்சியாக நின்று, புத்தம் புதிய வரலாறுகளை எழுதப் போகிறது - புரட்சித்தலைவி அம்மாவின் கொள்கைகளை எந்தச் சமரசமும் இன்றி வாழ வைத்து, தமிழகம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் நாம் பெறப்போகும் சரித்திர வெற்றியைப் பதிவு செய்யப் போகிறது - இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 33 ஆம் ஆண்டில் கால்பதிக்கும் 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர், நிர்வாகத்தினர், அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், தொடரட்டும் வெற்றிப்பயணம் என்றும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00