நாகை, திருவாரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்‍ கூட்டம்

Jul 11 2020 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை, திருவாரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்‍ கூட்டத்தில், நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

நாகை வடக்கு மாவட்டத்திற்கு சமீபத்தில் புதிய பொறுப்பாளர்களை கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில், சீர்காழி நகர கழகம் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய கழகம் சார்பில், இருவேறு இடங்களில் ஆலோசனைக்‍ கூட்டங்கள் நடைபெற்றன. வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டங்களில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ரெங்கசாமி பங்கேற்று, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளர் திரு. பொன். தா. மனோகரன், சீர்காழி நகர செயலாளர் ஏ.கே. சுரேஷ், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பாரிவள்ளல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ். காமராஜ் தலைமையில், சோழங்கநல்லூர் அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ரெங்கசாமி பங்கேற்று பேசினார். அப்போது, மாண்புமிகு அம்மாவின் வழியில் தமிழக மக்கள் நலனை விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்கக்‍ கூடிய தமிழக அரசியல் களத்தில், தெளிவான ஆளுமையும், ஆற்றலும், நுண்ணறிவும் கொண்ட ஒரே தலைவர் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மட்டுமே என்றும், அவரது தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சிமலர கழக தொண்டர்கள் மனதில் வைத்து களப்பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் கழக அம்மா தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் திரு. சத்தியமூர்த்தி, திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் மணிகண்டன், கழக தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வி செங்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்‍​கூட்டம், மாவட்டச் செயலாளர் திரு. எஸ். கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கழகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், வருகின்ற தேர்தல்களில் கழக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற பாடுபடுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட அவைத் தலைவர் திரு. கே.என் துரை, கூடலூர் நகர கழக செயலாளர் திரு. சையத் அனூப்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00