சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு - நெல்லையில் சிபிஐ அதிகாரிகள் விடிய விடிய விசாரணை

Jul 11 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, நெல்லையில் உள்ள சுற்றுலா மாளிகையில், சிபிஐ அதிகாரிகள், விடிய விடிய விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி விசாரணையிலிருந்த இந்த வழக்கு, சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று தூத்துக்குடி சிபிசிஐடி காவல் நிலையத்திற்குச் சென்று, இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்த சிபிஐ குழுவினர், அங்கு ஆலோசனை நடத்தினர். பின்னர், சிபிசிஐடி காவலரிடம், இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

இன்று காலை, சாத்தான்குளத்திற்குச் சென்று விசாரணை நடத்தவுள்ள சிபிஐ போலீசார், செல்போன் கடைக்கு அருகேயுள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் ஜெயராஜ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். அதன் பிறகு சாத்தான்குளம் காவல் நிலையத்திலும் விசாரணை நடத்தப் போவதாக சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00