சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

Jul 11 2020 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி மறுக்‍கப்பட்டிருந்து. இதன் விளைவாக, பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தியது. இந்நிலையில், சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 10 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஐ.டி. நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்களிலேயே வர வேண்டும் என்றும், தளர்வுகள் வரும் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00