தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு ஒரேநாளில் 64 பேர் உயிரிழப்பு - இதுவரை ஆயிரத்து 829 பேர் பலி

Jul 11 2020 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் 64 பேர் பலியானதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 829 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 969 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று மட்டும் 64 பேர் பலியானதைத் தொடர்ந்து, கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்து 829 ஆக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 46 ஆயிரத்து 105 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரேநாளில் 4 ஆயிரத்து 163 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 82 ஆயிரத்து 324 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 242 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 219 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 195 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 192 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 143 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00