வீரன் அழகுமுத்துக்‍கோன் பிறந்தநாள் கொண்டாட்டம் : அமமுக சார்பில் மலர்தூவி மரியாதை

Jul 11 2020 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீரன் அழகு முத்துகோனின் 263-வது பிறந்தநாளையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நெல்லை மாநகர் மாவட்டக்‍ கழகம் சார்பில், நாங்குநேரியில் வீரன் அழகுமுத்துக்கோன் 263-வது குருபூஜையையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு, நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு.ஏ.பி. பால்கண்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.​

தூத்துக்குடி டூவிபுரம் 30வது வட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டச் செயலாளர் திரு.காசிலிங்கம் ஏற்பாட்டின்பேரில், அலங்கரித்து வைக்கப்பட்ட வீரன் அழகு முத்துகோன் திருவுருவப்படத்திற்கு, தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.புவனேஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை கிழக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் திரு.மா.பா.ரோகிணி கிருஷ்ணகுமார் தலைமையில், சுந்தராபுரத்தில் உள்ள மாற்றம்பாளையம் கழக அலுவலகத்தில், வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு மலர் மாலையிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்ட கழக துணைச் செயலாளர் கீதாஞ்சலி, சுந்தராபுரம் பகுதி கழக செயலாளர் திரு.நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00