சாத்தான்குளம் இரட்டைக்‍ கொலை வழக்‍கு - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்‍கம்

Jul 12 2020 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான் குளம் இரட்டை கொலை தொடர்பாக, இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ- யிடம் மேலும் சில ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர். இதனிடையே ஏற்கெனவே கைதாகி சிறையில் அடைக்‍கப்பட்ட மேலும் 5 போலீசார் பணியிடை நீக்‍கம் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்‍கு அழைத்து ​செல்லப்பட்ட தந்தை மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்‍கு விசாரணையை சி.பி.ஐ நேற்று தொடங்கியது. ஜெயராஜ் வீடு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக இன்று, திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன. அப்போது சிபிசிஐடி, போலீசார், வழக்கு தொடர்பான சில ஆவணங்களை சிபிஐ- யிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே சிறைச்சாலையில் உள்ள சாத்தான்குளம் ஆய்வாளர் உட்பட 5 பேரை முதல் கட்டமாக காவலில் எடுத்து விசாரணை நடத்தவும், இரண்டாம் கட்டமாக, தடயங்களை அழித்ததாக, கூறப்படும் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. பெஃன்னிக்ஸின் நண்பர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தவும் சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, தந்தை மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்‍கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, தாமஸ் ஃபிரான்ஸிஸ் ஆகியோரை பணியிடை நீக்‍கம் செய்து தூத்துக்‍குடி காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஜெயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00