திருச்சியில் பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன் : 2 மணி நேரத்தில் உயிருடன் மீட்பு

Jul 12 2020 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி அருகே பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன் 2 மணி நேரத்தில் உயிருடன் மீட்கப்பட்டான்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை அருகே ஜம்முநாதபுரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ஆதித்யா, மொபைல் போனை பாறை இடுக்கில் போட்டுவிட்டார். அதனை எடுப்பதற்காக குனிந்த பொழுது மூன்று பாறைகள்கள் சரிந்து விழுந்ததில் சிறுவன் பறைகளுக்கு அடியில் சிக்கி கொண்டான். ஆதித்தியாவுடன் இருந்த மற்ற நான்கு சிறுவர்கள் உடனடியாக தாத்தையங்கார் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு வந்து 3 பாறைகளையும் தனித்தனியே கயிற்றில் கட்டி, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இழுத்து பிடித்தனர். அப்போது கிடைத்த இடைவெளியில் தீயனைப்பு படையினர் சிறுவனை உயிருடன் மீட்டனர்.

தொடர்ந்து,தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு,தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00