காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

Jul 13 2020 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்‍கூடும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாக இருக்‍கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திருக்கழுக்குன்றத்தில் 9 சென்டிமீட்டரும், கேளம்பாக்‍கத்தில் 8 சென்டிமீட்டரும், சென்னை விமான நிலையத்தில் 7 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. கர்நாடகா, கேரளா கடலோரப் பகுதிகளிலும், தென்கிழக்‍கு அரபிக்‍கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்‍கூடும் என்பதால் மீனவர்கள், இன்றுமுதல் 17ம் தேதி வரை கடலுக்‍குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00