சாத்தான் குளம் தந்தை - மகன் மரணத்தை கொலை வழக்‍காக மாற்றியது சி.பி.ஐ., - முதல் குற்றவாளியாக எஸ்.ஐ., ரகு கணேஷ் பெயர் சேர்ப்பு

Jul 14 2020 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான் குளம் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ள சி.பி.ஐ., இவ்வழக்‍கில் முதல் குற்றவாளியாக உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் பெயரை சேர்த்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை சிபிசிஐடி காவல்துறை கொலை வழக்காக பதிவு செய்திருந்தது. வழக்‍கு விசாரணை சி.பி.ஐ.க்‍கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்‍கை கொலை வழக்‍காக சி.பி.ஐ மாற்றியுள்ளது. முதல் குற்றவாளியாக உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ், 4-ம் குற்றவாளியாக ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொலை மற்றும் தடயங்களை அழித்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரது ஜாமீன் மனு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் ஸ்ரீதர் மனு வாபஸ் பெறப்பட்டதால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாலகிருஷ்ணன் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00