கொரோனா அச்சத்தால் மனிதநேயத்தை மறந்த மகன்கள் - பெற்ற தாயை நடு வீதியில் தவிக்க விட்ட அவலம்

Jul 14 2020 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் துறையூரில் கொரோனா இருக்குமோ? என்ற அச்சத்தில் பெற்ற தாயை நடுரோட்டில் மகன்கள் தவிக்க விட்டுச்சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார்.பி.டி நகரைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் குமார் தன்னுடன் இருந்த தாயை வீட்டின் வெளியே தனியே விட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

வீட்டின் வெளியே தனியாக இருந்த அவரது 70 வயது தாய் சரோஜாவை அக்கம் பக்கத்திலிருந்த வீட்டுக்காரர்கள் உணவளித்து இரண்டு நாட்களாக கவனித்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் சரோஜாவை அவரது மூத்த மகன் ராஜா வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு சென்றனர். தனது தாய்க்கும் கொரானா இருக்குமோ என்ற பயத்தில் மூத்த மகன் ராஜா தனது தாயை நடுரோட்டில் தவிக்க விட்டு தன் மனைவியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் சரோஜா மயக்கமடைந்தார். இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மூதாட்டி சரோஜாவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00