தந்தை-மகன் இரட்டைக்‍ கொலை வழக்‍கு விவகாரம் : காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேரிடம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணை

Jul 16 2020 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
தந்தை-மகன் கொலை வழக்‍கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேரிடம், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து சி.பி.ஐ அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்‍ஸ் கொலை வழக்‍கு தொடர்பாக, தூத்துக்‍குடியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெண்ணிலா, பாலசுப்ரமணியன் ஆகியோரிடம், மாநில மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி. குமார் நேற்று விசாரணை நடத்தினார்.

இவ்வழக்‍கில், அழிக்‍கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்கும் முயற்சியில் சி.பி.ஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் இருந்து Hard disk உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் வீடியோ பதிவுகளை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகிய 4 பேரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அவர்களை காவல்துறை பாதுகாப்புடன் சாத்தான்குளத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடம், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து, சி.பி.ஐ ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்‍லா தலைமையில் 8 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த 19 ம் தேதி தந்தை மகனுக்கு காவல் நிலையத்தில் என்ன நேர்ந்தது என்பதை செய்து காட்ட சொல்லி அதனையும் வீடியோ பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் இடையே எழுத்தர் பியூலாவிடமும் விசாரணை நடைபெற்றது. மற்றும் தலைமை காவலர் ரேவதி சிபிஐ அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து நேரில் வந்து வாக்குமூலம் அளித்தார். 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை இரவு 12.30 மணிக்கு முடிவடைந்தது. இதனையடுத்து நள்ளிரவு 1.30 மணிக்கு கொண்டு வந்த 5 காவலர்களும் பாதுகாப்பாக மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00