தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது - 92.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

Jul 16 2020 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 92 புள்ளி மூன்று சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எட்டரை லட்சம் மாணவ, மாணவர்கள் எழுதினர். கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, மே 27-ல் தொடங்கி ஜூன் 10-ம் தேதி நிறைவடைந்தது. மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி முடிவடைந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

இதில் 92 புள்ளி மூன்று சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்‍கம்போல் மாணவிகளே அதிக எண்ணிக்‍கையில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94 புள்ளி எட்டு பூஜ்ஜியம் சதவீதம் பேரும், மாணவர்கள் 89 புள்ளி நான்கு ஒன்று சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்தனர். அதாவது மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி விகிதம் 5.39 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் உள்ள 7,127 மேல்நிலைப்பள்ளிகளில், 2,120 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்தது. 96.99 சதவீதத்துடன் 2 வது இடத்தை ஈரோடும், 96.39 சதவீத தேர்ச்சியுடன் கோவை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

முக்கிய பாடங்களின் தேர்ச்சி விகிதத்தில், இயற்பியலில் 95.94 சதவீதமும், வேதியியலில் 95.82 சதவீதமும், உயிரியலில் 96.14 சதவீதமும், கணிதத்தில் 96.31 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். தாவரவியலில் 93.95 சதவீதமும், விலங்கியலில் 92.97 சதவீதமும், கணினி அறிவியலில் 99.51 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00