சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்‍கு - போலீஸ் கைதிகள் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடம், சி.பி.ஐ அதிகாரிகள் வாக்‍குமூலம் பெற்றனர்

Jul 16 2020 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்‍கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடம், சி.பி.ஐ அதிகாரிகள் வாக்‍குமூலம் பெற்றனர். ஆவணங்களை சரிபார்க்க கூடுதல் சி.பி.ஐ அதிகாரிகள் டெல்லியிலிருந்து வந்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்‍ஸ் கொலை வழக்‍கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடம், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர். கடந்த 19-ம் தேதி தந்தை மகனுக்கு காவல் நிலையத்தில் என்ன நேர்ந்தது என்பதை செய்து காட்ட சொல்லி அதனையும் வீடியோ பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையின் இடையே காவல்நிலைய எழுத்தர் பியூலாவிடமும் விசாரணை நடைபெற்றது. மேலும், தலைமை காவலர் ரேவதி சிபிஐ அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து நேரில் வந்து வாக்குமூலம் அளித்தார். சாத்தான்குளத்தில் விசரணை நிறைவடைந்து, நள்ளிரவு 1.30 மணிக்கு, 5 காவலர்களும் மதுரைக்‍கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடம், மதுரையிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்தில், 3-வது நாளாக விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது ஐந்து பேரிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் வாக்‍குமூலம் பெற்றுள்ளனர். மேலும் சாத்தான் குளம் காவல் நிலைய சிசிடிபி கேமிராவில் அழிக்‍கப்பட்ட காட்சிகளை மீட்பது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இன்று மாலை 5.30 மணியுடன் சி.பி.ஐ. காவல் முடிவடைவதால் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00