கொரோனா பணிக்‍காக பெறப்பட்ட முதலமைச்சர் நிதி விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jul 16 2020 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நிவாரண நிதி அளித்தவர்கள் விவரம், எவ்வளவு பெறப்பட்டது? பயனாளிகள் யார் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையத்தளத்தில் வெளிப்படையாக தமிழக அரசு வெளியிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்‍கு, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, எவ்வளவு நிதி பெறப்பட்டது என்பது குறித்து இணையதளத்தில் வெளியிட என்ன சிரமம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினர். கொரோனா நிவாரண நிதி கொடுத்த நன்கொடையாளர்களின் பெயர்கள், பயனாளிகள் யார்? எப்படி நிதி நிர்வகிக்கப்படுகிறது? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசு இணையதளத்தில் எட்டு வாரத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00