தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 881 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 97 பேர் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 3 ஆயிரத்து 935ஆக உயர்வு

Aug 1 2020 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 881 பேருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 97 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்‍கை 3 ஆயிரத்து 935ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் நேற்று ஒரே நாளில், 5 ஆயிரத்து 881 பேருக்‍கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்‍கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்‍கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும், ஆயிரத்து 13 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 5 ஆயிரத்து 778 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்‌கை 1 லட்சத்து 83 ஆயிரத்து 956-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு மேலும் 97 பேர் பலியாகினர். இதன் மூலம், உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 3 ஆயிரத்து 935-ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மரு‌த்துவ அறிக்கையின்படி, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர்த்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் பாதிப்பு 10 ஆயிரத்தைக்‍ கடந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00