திருவாரூர் மாவட்டத்தில், பொதுவிநியோக திட்டத்தில் மிகப்பெரும் ஊழல் - ரேஷன் கடைகளில் இலவச அரிசி கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாக புகார்

Aug 1 2020 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டத்தில், பொதுவிநியோக திட்டத்தில் நடைபெறும் ஊழலால், ரேஷன் கடைகளில் இலவச அரிசி கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

அமைச்சர் காமராஜின் சொந்த மாவட்டமான திருவாரூரில், ரேஷன் கடைகளில் தரமற்ற நிறம் மங்கிய அரிசி வழங்கப்பட்டு வருவதால், அவற்றை 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாங்குவதில்லை. தரமற்ற அரிசியாக இருந்தாலும் வேறு வழியின்றி வாங்க நினைக்கும் ஏழைகளுக்கும், உரிய ஒதுக்கீட்டின்படி அரிசி கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா நிவாரணமாக மத்திய அரசு, நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்டும், அந்த அரிசியும், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முறையாக வழங்குவதில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், ரேஷனில் அரிசி வழங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு, பெருமளவு முறைகேடு நடப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டாதாக போலியாக கணக்கு காட்டப்பட்ட அரிசி மூட்டைகளானது, அரசின் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, பின்னர் தனியாருக்கு விற்பனை செய்ததில், பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00