தமிழகத்தில் முழு ஊரடங்கால் களையிழந்த ஆடிப் பெருக்கு விழா : மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய காவிரிக்கரை

Aug 2 2020 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்‍கு விழா கொண்டாடப்படும் போதிலும், கிருஷ்ணகிரி அணை, ஒகேனக்கல் போன்ற முக்கிய இடங்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக இவ்விழா களையிழந்து காணப்பட்டது.

கிருஷ்ணகிரி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்‍கைக்‍ கொண்டாட மக்‍கள் அதிகம் கூடும், KRP அணை, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் போன்ற இடங்களில் பூஜைகள் நடத்த தடை விதிக்‍கப்பட்டிருந்தது. காவல்துறை கண்காணிப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் இன்று வெறிச்சோடிக்‍ காணப்பட்டது.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதிகள் ஆற்றில் நீராடி தாலியை புதுப்பித்து நீரை வழிபாடு செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்‍குப்பதிவு செய்யப்போவதாக தெரிவித்ததால் மக்‍கள் அச்சத்துடன் வழிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் ஆண்டு தோறும் நெல்லுக்கு அடுத்தபடியாக பயிர் செய்யும் வாழை விவசாயத்தை ஆடிப்பெருக்கை ஒட்டி தொடங்குவது வழக்கம். அந்தவகையில் தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் சாலை, கோரம்பள்ளம் இருவப்பபுரம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வருண பகவானை வணங்கி வாழைக் கன்றுகள் நடும் பணியை தொடங்கினார்கள். மேலும் இந்த ஆண்டு வாழை விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் நம்பிக்‍கை தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்படும் ஒகேனக்கல் காவிரிப்படுகையில் இந்த விழாவின் சுவடே தெரியாத அளவுக்கு களையிழந்து காணப்பட்டது. வழக்கமாக இந்நாளில் புதுமண தம்பதிகள் அதிகம் கூடி சடங்குகள் செய்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் அனைவரும் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகினர். ஆடிப்பெருக்கை கொண்டாட பலரும் வருகை தருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. யாரும் ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி படுகை பகுதிக்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் மணப்பாறை அருகே ஆண்டவர்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் 800 ஆண்டுகள் பழமையான நல்லாண்டவர் கோவிலிலும் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கூடும் இந்த கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவுக்கான அடையாளமே இல்லாத நிலை காணப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00