தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதியானது - ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ளும் ஆளுநரை மருத்துவர்கள் குழு கண்காணிப்பு
Aug 2 2020 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ளும் அவரை மருத்துவர்கள் குழு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த அரசு அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் என 87 பேருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநரின் உதவியாளர் தாமஸ் என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால், ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித், கடந்த ஏழு நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய மருத்துவமனை, தொடர்ந்து அவரது உடல்நிலையை தனி மருத்துவக் குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.