கர்நாடக மாநில அணைகளிலிருந்து வெள்ளமென பெருக்‍கெடுத்து பாயும் தண்ணீர் - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்‍கு 20 ஆயிரம் கனஅடியாக வரத்து அதிகரிப்பு

Aug 6 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் பெருக்‍கெடுத்து பாய்கிறது. தற்போது நீர்வரத்து விநாடிக்‍கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் போன்ற பெரிய அணைகள் நிரம்பியுள்ளன. பாதுகாப்பு கருதி இந்த அணைகளிலிருந்து ஏற்கெனவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தற்போது தமிழகத்தின் எல்லையான பில்லுகுண்டுலு பகுதியில் வெள்ளமென பெருக்‍கெடுத்து பாய்கிறது. விநாடிக்‍கு சுமார் 20 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி போன்ற இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்தத் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுவதால், ஒகேனக்‍கல் காவிரிக்‍ கரையோர மக்‍கள் பாதுகாப்பான இடங்களுக்‍கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00