அரியலூர் அருகே வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமம் - அச்சத்தில் உறங்காமல் இரவு முழுவதும் விழித்திருந்த மக்‍கள்

Aug 9 2020 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலத்தெரு, வடக்குதெரு உள்ளிட்ட தெருக்களில் இருந்து வடிகாலாகும் மழை நீர், வாய்க்கால் மூலம் வடக்குத் தெருவில் உள்ள சிவன் கோயில் குளத்தில் வடிகாலாவது வழக்கம். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இது குறித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு பெய்த கன மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கைக்குழந்தையுடன் வீட்டுக்குள் புகுந்த நீரை பாத்திரங்களைக் கொண்டு வாரி இறைத்தனர். மேலும். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாத்தம்பாடி மெயின் ரோட்டில் தா.பழூர் - ஸ்ரீபுரந்தான் வழியாக அரியலூர் செல்லும் சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00