அதர்மத்தை அடியோடு அகற்றி, தர்மம் செழித்திடவும், சத்தியம், அன்பு நிலைத்திடவும் கிருஷ்ணர் அவதரித்த திருநாளில் உறுதியேற்போம் - டிடிவி தினகரன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

Aug 10 2020 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
அதர்மத்தை அடியோடு அகற்றி, தர்மம் செழித்திடுவதற்கும், சத்தியத்தையும் அன்பையும் நிலைத்திடச் செய்வதற்கும் கிருஷ்ணர் அவதரித்த திருநாளில் உறுதியேற்போம் என அமமுக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அதர்மம் புரிவோரை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டி, அறம் தழைத்தோங்கிடச் செய்வதற்காக, கிருஷ்ண பகவான் அவதரித்த திருநாளைக்‍ கொண்டாடி மகிழும் அனைவருக்‍கும் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்‍ கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில், கிருஷ்ணர் தங்கள் வீட்டிற்கு நேரில் வருவதாக மாக்‍கோலமிட்டு, அவருக்‍குப் பிடித்தமான உணவுப் பண்டங்களைச் செய்து வைத்து, படையலிட்டு மக்‍கள் கொண்டாடுகிறார்கள் - எத்தனை துன்பங்கள் வந்தாலும், கிருஷ்ணர் உடனிருந்து காத்திடுவார் - பகையையும், துரோகத்தையும் எதிர்த்து வெல்கிற ஆற்றலைத் தந்திடுவார் என்ற அவர்களின் நம்பிக்‍கை மெய்யாகிட இந்நாளில் வேண்டிடுவோம் - இந்த நெருக்‍கடியான நேரத்தில் ஒருவருக்‍கு ஒருவர் அன்பு பாராட்டிடுவோம் - இயன்றதைச் செய்து மற்றவர்களுக்‍கு உதவிடுவோம் என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தெளிந்த தண்ணீரைப் போல, குழப்பமும் தடுமாற்றமும் இல்லாமல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால் எடுத்த செயலில் வெற்றி பெறலாம் என்ற கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை நெஞ்சில் நிறுத்தி வெற்றிகளைக்‍ குவிப்போம் - விரைவில் அதர்மத்தை அடியோடு அகற்றி, தர்மம் செழித்திடுவதற்கும், சத்தியத்தையும், அன்பையும் நிலைத்திடச் செய்வதற்கும் கிருஷ்ணர் அவதரித்த திருநாளில் உறுதியேற்றிடுவோம் என்றும் அமமுக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00