பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது - நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்மட்டம் உயர்வு

Aug 11 2020 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துவரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் பலத்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி கொள்ளளவுக்கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை கடந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 36.23 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டு இருக்கிறது. இதேபோல், 156 அடி கொள்ளளவுக்கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் இன்று காலையில் 130.90 அடியாக உயர்ந்தது.

118 அடி கொள்ளளவுக்கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.20 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் நம்பியாறு, வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக ராமாநதி, கருப்பாநதி, அடவிநயினார் கோவில் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00