தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 834 ‍பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் ‍மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649 ஆக உயர்வு

Aug 12 2020 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்‍கு 118 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 5 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 5 ஆயிரத்து 834 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்‍கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்‍கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் நேற்று 986 பேருக்‍கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம், சென்னையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழே குறைந்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 54 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 6 ஆயிரத்து 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 -ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்‍கு 118 பேர் உயிரிழந்தனர். 71 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 47 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்‍கையின்படி, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு - 388, திருவள்ளூர் - 362, தேனி - 297, காஞ்சிபுரத்தில் 330 பேருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை - 324, கடலூர் - 281, கன்னியாகுமரி - 192, தூத்துக்‍குடியில் 110 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00