அரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை : கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டி கிராம மக்கள் போராட்டம்

Aug 13 2020 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை கூறியும், அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சம்மந்தப்பட்ட நபர்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்துவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00