புதுக்கோட்டை அருகே, ஆடு மேய்க்க 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 வயது சிறுவன் - குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்பு

Aug 13 2020 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, ஆடு மேய்க்க நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 வயது சிறுவனை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டனர்.

கறம்பக்குடி அருகேயுள்ள குழந்தைராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர், தனது 10 வயது மகன் வைரவேலை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்பவரிடம் நாற்பதாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்து வந்த அந்த சிறுவன், பாபநாசம் அருகே ராஜகிரியில், ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் துறையினர், போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர், ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் வைரவேலை மீட்டனர்.

மேலும், சிறுவனை ஆடு மேய்க்க கொத்தடிமையாக பயன்படுத்திய முருகானந்தன் மீதும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான வெள்ளைச்சாமி, மது குடிப்பதற்காகவே, தனது மகனை அடமானம் வைத்தது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00