சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

Aug 13 2020 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திரா மற்றும் ஒடிஷா கடலோரப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னை உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்‍கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மற்றும் ஒடிஷா கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்‍கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்‍கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்‍ கடல் மற்றும் அதனையொட்டிய ஆந்திரா, ஒடிஷா கடலோரப் பகுதிகளிலும், வடமேற்கு வங்கக்‍கடல் மற்றும் அதனையொட்டியுள்ள ஒடிஷா, மேற்குவங்க கடலோரப் பகுதிகளிலும், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்‍ கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்‍கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்‍கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00