சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி

Aug 13 2020 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாளை மறுதினம் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை பிரிவு, மகளிர் காவல் பிரிவு, குதிரைப் படை பிரிவினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

நாட்டின் 74-ஆவது சுதந்திர தின விழாவை சமூக இடைவெளியுடன் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாளை மறுதினம் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை பிரிவு, மகளிர் காவல் பிரிவு, குதிரைப் படை பிரிவினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் காரணமாக, பந்தல் மற்றும் சாலை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 8, 10- ம் தேதிகளில் ஒத்திகைகள் நடைபெற்றன. இறுதி கட்ட ஒத்திகை நிகழ்ச்சி மூன்றாவது முறையாக இன்றும் நடைபெற்றது. அதற்காக போக்‍குவரத்து இன்று காலை மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 38 காவலர்கள் பிளாஸ்மா தானம் வழங்கினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை செயலர் திரு.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் மூலம் 70 பேர் குணமடைந்து உள்ளதாக கூறினார்.

சென்னையில் பொதுமக்கள் நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாகவும் , நோய் தொற்று அதிகமுள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00