வனவிலங்குகளை கொல்ல அவுட்டுக்காய் வெடிமருந்து தயாரித்த நபர் கைது - கோவை வன அதிகாரிகள் நடவடிக்கை

Sep 16 2020 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவையில் வனவிலங்குகளை வேட்டையாட, அவுட்டு காய் தயாரித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை வனப்பகுதியில் வனவிலங்குகளை கொல்ல, அவுட்டுக்காய் எனப்படும் சிறிய அளவிலான நாட்டு வெடி குண்டுகள் பழம் வடிவில் தயாரிக்கப்படுகின்றன. இதனை உணவுப்பொருள் என நினைத்து சாப்பிடும்போது, அது வெடிப்பதால் வனவிலங்குகள் உயிரிழக்கின்றன. இந்நிலையில், அவுட்டுக்காய் தயாரிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சம்பவ இடத்துக்கு சென்ற வனச்சரகர்கள் மற்றும் தனிக்குழுவினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சீலியூர் பேருந்து நிறுத்தம் அருகே, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூர்த்தி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, ஏர்கன் மற்றும் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கு தேவைப்படும் வெடிமருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வெடி மருந்துகளை கைப்பற்றிய வனத்துறையினர், மூர்த்தியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00