ஒசூர் அருகே பா.ஜ.க ஒன்றிய இளைஞரணி தலைவர் ஒடஒட விரட்டி வெட்டி படுகொலை - உறவினர்கள் சாலைமறியல்

Sep 16 2020 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒசூர் அருகே பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத். பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவராக இவர் பதவி வகித்து வந்தார். ரங்கநாத்திற்கும் போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரங்கநாத் , நேற்று இரவு தனது இளைய மகன் தனுஞ்செயாவின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த கும்பல் அவரை உருட்டு கட்டைகளாலும் பயங்கர ஆயுதங்களாலும் தாக்கியது. இதில் ரங்கநாத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதனையடுத்து அவரது உடலை கிராமமக்கள் ஒசூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த கெலமங்கலம் போலீஸார் குந்துமாரணப்பள்ளி கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆத்திரமடைந்த ரங்கநாத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அப்பகுதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்‍கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00