சூரரைப்போற்று திரைப்பாடலுக்கு எதிரான வழக்கு - சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 16 2020 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் பாடலுக்கு எதிரான புகார் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் ஒரு பாடலில், சாதி தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த வரிகள் தமிழகத்தில் சாதிப் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக்கூறி, 2022-ம் ஆண்டு வரை இப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி, தருமபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளரிடம் மீண்டும் புகார் அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00